ADDED : செப் 02, 2026 06:42 AM
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் மலை கம்பத்ராயன் கிரி
மலையில், நேற்று மாலை திடீரென காட்டுத்தீப்பிடித்து எரிந்தது. இதில்
அரிய வகை மூலிகை மரங்கள், செடிகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கின.
விலங்குகள்
அலறியடித்து ஓட்டம் பிடித்தன. இரவு நேரம் என்பதால் சத்தியமங்கலம்
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை.
இன்று காலை
காலைதான் செல்ல முடியும்.மேலும் இரவு, 9:00 மணியை கடந்தும் தீ எரிந்து
கொண்டே இருந்தது. வெப்பம் காரணமாக தீ பிடித்ததா? அல்லது யாரேனும் பீடி
குடித்து விட்டு வீசி எறிந்ததில் தீப்பிடித்ததா? என்று தெரியவில்லை.
*
ஆப்பக்கூடல் அருகே சிந்தகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர்
கதிர்வேல், 65; தோட்டத்தில் நேற்று மாலை அறுவடை செய்த கரும்பு சோகைக்கு
தீ வைத்துள்ளார். அந்த தீ பரவி அருகில் அதே பகுதியை சேர்ந்த சரவணன்
தோட்டத்துக்கு பரவியது. இதில் மூன்றரை ஏக்கர் பரப்பிலான
கரும்புத்தோட்டம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்தியூர்
தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
