ADDED : டிச 24, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளவாடி, டிச. 24-
ஆசனுார் அருகேயுள்ள பழைய ஆசனுாரை சேர்ந்தவர் மாதேஷ், 30; ஜீரகள்ளி வனச்
சரக வனக்காப்பாளர். காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாதேஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் கூறியதாவது: மாதேஷ் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தோர் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டதால் மன உளைச்சலில் இருந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாதேசுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இவ்வாறு கூறினர்.