ADDED : ஏப் 30, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., காளிமுத்து, நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் காளிமுத்து, 64. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும், 2016ல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தார்.
மேலும் மாநில செயற்குழு உறுப்பினரான இருந்தார். இவர், உடல் நலக்குறைவால் நேற்று பாதிக்கப்பட்டார். பின்னர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு முன்னாள் மாவட்ட தலைவர் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
