/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேவல் சூதாட்டம் நடத்திய மாஜி பஞ்., தலைவர் கைது
/
சேவல் சூதாட்டம் நடத்திய மாஜி பஞ்., தலைவர் கைது
ADDED : ஜன 16, 2025 06:28 AM
பவானி: அம்மாபேட்டை அருகே, பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே குறிச்சி, செம்படாபாளையம் கரலாமணி கரடு பகுதி யில், பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக, எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சேவல் சூதாட்டம் நடத்திய செம்படாம்பாளையம் அடுத்த கள்ளுக்கடைமேட்டை சேர்ந்த சின்ராஜ், 52, கரலாமணியை சேர்ந்த கிருஷ்ணசாமி, 51, பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல்ரஹீம், 30, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 17 ஆயிரத்து, 930 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சின்ராஜ், பூனாச்சி பஞ்சாயத்து முன்னாள் மாவட்ட தலைவரும், அம்மா பேட்டை தி.மு.க., தெற்கு ஒன்றிய துணை செயலாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

