ADDED : ஆக 25, 2025 02:48 AM
ஈரோடு: கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்த, 41 புரவலர்களால் கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்வி அறக்கட்டளை, 1983ல் தொடங்கப்
பட்டது.
இதன் மூலம் பாலிடெக்னிக், பொறியியல், கலை கல்லுாரி, இண்-டஸ்ட்ரியல் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட், மெட்ரிக் ஹையர் செகண்-டரி ஸ்கூல், நேச்சுரோபதி மற்றும் யோகா மெடிக்கல் கல்லுாரி என ஆறு கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அறக்கட்டளையின் நிறுவனர் தினம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக டெல்லி அரசின் உள்துறை முதன்மை செயலர் அன்பரசு ஐ.ஏ.எஸ்., கலந்து கொண்டார். டெல்லி இ.பி.எப்., ஆணையர் செந்தில்குமார், கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் அறக்கட்டளை தலைவர் மருத்-துவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவி-சங்கர், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர், அறக்கட்-டளை பாரம்பரிய உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்-வர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியா-ளர்கள் பங்கேற்றனர்.