/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வளர்ச்சி திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
/
வளர்ச்சி திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
ADDED : மார் 10, 2024 03:31 AM
நம்பியூர்: நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, குருமந்துார் ஊராட்சி, நம்பியூர் பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
குருமந்துார் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சந்திரசேகர் தலைமை வகித்தார். நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலர்கள் தம்பி சுப்பிர
மணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், குருமந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆயிபாளையம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய வடிகாலுடன் கூடிய தார்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நம்பியூர் பேரூராட்சி 7, 12வது வார்டு பகுதிகளில், ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி வழியே தண்ணீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நம்பியூர் பி.டி.ஓ., வரதராஜன், பேரூராட்சி அ.தி.மு.க., செயலர் கருப்பணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்டமூர்த்தி, பழனிசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

