தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டவாலிபர்கள் நான்கு பேர் கைது

வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டவாலிபர்கள் நான்கு பேர் கைது

வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டவாலிபர்கள் நான்கு பேர் கைது


ADDED : ஏப் 29, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:அரசு பள்ளியிலும், வழிப்பறியிலும் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் பொன்னுசாமி வீதியை சேர்ந்தவர் சுந்தரம், 45; பைக்கில் ஈரோடு ஏ.பி.டி. சாலையில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் சுந்தரத்தை வழிமறித்து.

அவரை தாக்கி ரெட் மீ மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர் அறை பூட்டை உடைத்து, 23 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்தும் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

சுந்தரத்தை தாக்கி பணம், போனை பிடுங்கி சென்ற வழக்கில், ஈரோடு மாணிக்கம்பாளையம் லோகநாதன் மகன் பிரவீன்குமார், 26; ஈரோடு வீரப்பம்பாளையம் கரட்டாங்காடு சக்தி வேந்தன் மகன் நிகாஷ், 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் பள்ளியில் ரொக்கத்தை திருடிய வழக்கில் பிரவீன்குமாருக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது.

இவருக்கு உதவியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகர் சிங்கார வேலன் மகன் அருண், 20, வீரப்பன்சத்திரம் வாசுதேவன் மகன் மணிகண்டன், 24, செயல்பட்டது தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us