sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக அரங்கேறும் மோசடி

/

மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக அரங்கேறும் மோசடி

மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக அரங்கேறும் மோசடி

மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக அரங்கேறும் மோசடி


ADDED : ஆக 25, 2025 02:33 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி-களில், கல்வி துறையை பயன்படுத்தி, மாணவர்

களுக்கு உதவித்தொகை மற்றும் சலுகை என்ற பெயரில், மோச-டிக்கான மொபைல் அழைப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: மொபைல் போனுக்கு வாட்ஸ் ஆப் அழைப்பு (+91 92110 67429 என்ற எண்ணில் இருந்து வந்-தது. அதில் பேசியவர், கல்வித்துறையில் இருந்து பேசுகிறோம்; உங்கள் மாணவருக்கு ஸ்காலர் ஷிப் வந்துள்ளது. அதைப்பெற ஸ்கேனர் மூலம் நாங்கள் அனுப்பும் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பவும் என்றார். பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை தெளிவாக கூறினார். அடையாள அட்டையை வாட்ஸ்ஆப்பில் அனுப்புமாறு கேட்டதற்கு இணைப்பை துண்-டித்து விட்டார். மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல் பத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு வந்துள்-ளது. இவ்வாறு கூறினர்.இதுகுறித்து கல்வித்துறை

அதிகாரிகள் கூறியதாவது:

மாணவர்களின் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விப-ரங்கள் குறித்து அந்தந்த பள்ளிகள் மூலம் தகவல் பெறப்படுகின்-றன. இது தவிர எந்த தகவலையும், போன் மூலம் கல்வித்துறை கேட்பதில்லை. மாணவர்கள் வங்கி கணக்கு தொடர்பான எந்த தகவலையும் யாரிடமும் பரிமாறக்கூடாது. அதையும் மீறி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டால், 24 மணி நேரத்-திற்குள் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதன் மூலம், பணத்தை திரும்ப பெற முடியும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us