ADDED : மே 28, 2026 05:17 AM
ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 2ஏ, 4 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ஜூன், 4 ல், ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் துவங்க உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு சிறந்த பயிற்றுனர்கள் மூலம், தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்
படுகிறது. ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, தினமும் சிறு தேர்வுகள், வாராந்திர தேர்வு, இணைய வழித்தேர்வு, முழு மாதிரி தேர்வு, மென்பாடக்குறிப்பு எடுக்க இணைய தளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
விருப்பம் உள்ளோர் தங்கள் விபரத்தை, https://forms.gle/iCZoFVkkLeRqsNhQ9 என்ற கூகுள் லிங்கில் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் செயல்படும் மெய்நிகர் கற்றல் வலைத்தளத்தில் மாணவர்கள், தங்கள் சுய விபர பயனாளர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு மூலம் பதிவு செய்து, பல்வேறு போட்டி தேர்வுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், மாதாந்திர நடப்பு நிகழ்வுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
கூடுதல் விபரத்துக்கு, 0424 2275860, 94990 55943 என்ற எண்ணில் அறியலாம்.
கோபி நகராட்சி கூட்டத்தில்32 தீர்மானம் நிறைவேற்றம்கோபி:கோபி நகராட்சியின், மாதாந்திர கூட்டம் சேர்மன் நாகராஜ் (தி.மு.க.,), கமிஷனர் மங்கையர்கரசன் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 30 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். வணிக வளாக கட?கள், தெரு விளக்கு, துாய்மை பணியாளர்கள், தார்சாலை பிரச்னை குறித்து கவுன்சிலர்கள் பேசினர். கூட்டத்தில் மொத்தம், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
