தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட வாரியாக செல்லும் இலவச வேட்டி, சேலைகள்

மாவட்ட வாரியாக செல்லும் இலவச வேட்டி, சேலைகள்

மாவட்ட வாரியாக செல்லும் இலவச வேட்டி, சேலைகள்


ADDED : ஜன 03, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இதற்காக நடப்பாண்டில், 1 கோடியே, 77 லட்-சத்து, 22,995 வேட்டிகள், 1 கோடியே, 77 லட்சத்து, 64,471 சேலைகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு, உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பண்டிகைக்கு இன்னும், 11 நாட்களே உள்ள நிலையில் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுபற்றி விசைத்தறி உற்பத்தியாளர் கூறியதாவது:

தற்போதைய நிலையில், 75 முதல் 80 சதவீதம் வேட்டி, 65 முதல் 70 சதவீத சேலை உற்பத்தியாகி, வில்லரசம்பட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கூட்டுறவு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் மூலம் மாவட்ட வாரியாக அனுப்ப வேண்டிய பட்டியல் பெறப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கும், சில தாலுகாக்களுக்கும் அனுப்பும் பணி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பொங்கல் பண்டிகையின்போது, 60 சதவீத கார்டுதாரர்களுக்குக்கூட வேட்டி, சேலைவழங்க வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us