/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓ.ஏ.பி., பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலை
/
ஓ.ஏ.பி., பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலை
ADDED : அக் 18, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு (ஓ.ஏ.பி.,) தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது, இலவச சேலை, வேட்டி வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஓ.ஏ.பி., திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 1.60 லட்சம் பயனாளிகள் உள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக வழங்கப்பட்டு விடும். விடுபட்டவர்களுக்கு தீபாவளிக்கு பின் வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.