ADDED : நவ 22, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், நவ. 22-
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, காங்கேயத்தில் சென்னிமலை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வரும், 24ம் தேதி இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடக்கிறது.
முகாமுக்கு வருவோர், தெளிவான அடையாள அட்டை, ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை எடுத்து வர
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கண் புரையுள்ள நோயாளிகள், கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு இலவசம். கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு, தரமான மூக்கு கண்ணாடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.