ADDED : பிப் 25, 2026 07:10 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரம் அடுத்த குண்டடம், ஈஸ்வரசெட்டிபாளையத்தில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், 319 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்டம் முழுவதும் இதுவரை, 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது கூறினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், குண்டடம் மேற்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
