நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம், ஈஸ்வரசெட்டி பாளையத்தில், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குண்டடம், ருத்ராவதி பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பட்டாக்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ், ஆர்.டி,ஓ., பெலிக்ஸ் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.