ADDED : ஆக 22, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கு இலவச பயிற்சி வகுப்பு, மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. வரும், 24ம் தேதி முதல் தொடர்ந்து, மூன்று வார ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். பதிவு செய்வோருக்கு, பயிற்சி வழங்கப்படும் இடம் தெரிவிக்கப்படும்.
பயிற்சியுடன், வகுப்புக்கு தேவையான பாடக்குறிப்பு, போட்டி தேர்வுகளுக்கான தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.