ADDED : ஜூன் 26, 2026 01:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; சித்தோட்டில் வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.
இங்கு வரும் ஜூலை, 6 முதல் ஆக., 8 வரை, பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி வழங்கப்பட உள்-ளது. பயிற்சி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், உணவு இலவசமாக வழங்கி, பயிற்சி நிறைவில் சான்-றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்கள் குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில்
முன்பதிவு செய்யலாம்.
