/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு விசைத்தறிகள் இயக்கம் பாதிப்பு
/
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு விசைத்தறிகள் இயக்கம் பாதிப்பு
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு விசைத்தறிகள் இயக்கம் பாதிப்பு
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு விசைத்தறிகள் இயக்கம் பாதிப்பு
ADDED : செப் 30, 2025 12:53 AM
அந்தியூர், அந்தியூர், தவிட்டுப்பாளையம், தங்கபாளையம், ஜீவா செட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் தவிட்டுப்பாளையம் விசைத்தறி உரிமையாளளர் சங்கத்தினர், அண்ணாமடுவில் உள்ள துணை மின்நிலையத்துக்கு நேற்று சென்றனர். உட்கோட்ட செயற் பொறியாளர் அங்கப்பனிடம், தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தினர்.
இதுகுறித்து தவிட்டுப்பாளையம் விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது: தவிட்டுப்பாளையத்தில், 1,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 முறை மின்வெட்டு ஏற்பட்டதால் மெஷின்கள் பழுதடைந்து, உற்பத்தி பாதித்தது. நான்கு நாட்களில் ஒரு விசைத்தறிக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
அந்தியூர் துணை மின் நிலைய உட்கோட்ட செயற்பொறியாளர் அங்கப்பன் கூறியதாவது:
அந்தியூர்-பவானி சாலையில் உள்ள, 500 கிலோவாட் டிரான்ஸ்பார்மர், நான்கு நாட்களில் இருமுறை பழுதானது. தற்போது புதிய டிரான்ஸ்பார்மர் மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.