ADDED : மார் 14, 2026 04:53 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகே நொச்சிக்குட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 60, லாரி டிரைவர். தாளவாடியில் இருந்து மாடு-களை ஏற்றிக்கொண்டு கேரளா சென்றபோது, புன்செய்புளியம்-பட்டி வாரச்சந்தை அருகே லாரி பழுதானது. இதனால் அந்த லாரி டிரைவர் மும்தாஜ் அகமது அழைத்ததின் பேரில், தனக்கு சொந்த-மான லாரியுடன் சென்ற ராமகிருஷ்ணன், மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது வந்த ஆறு பேர், மாடுகளை லாரிகள் ஏற்றக்கூடாது என தகராறில் ஈடுபட்டனர். பின் ராமகிருஷ்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் புகாரின்படி புன்செய்புளி-யம்பட்டி போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். தலைமறை-வான மூன்று பேரை தேடி வந்தனர். இருவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கார்த்தி-கேயன் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
