ADDED : மார் 22, 2026 07:15 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:தேர்தல்
நிலை கண்காணிப்பு குழு சார்பில், ஈரோடு கருங்கல்பா-ளையத்தில்
சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவ படையினர்,
உள்ளூர் போலீசாருடன் நிலை கண்காணிப்பு குழுவினர், 24 மணி நேரமும்
வாகன சோத-னையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பார்சல் வேன்களில் தீவிர
சோதனை
மேற்கொள்கின்றனர்.
பணம், பரிசு பொருட்கள், ஆயுதங்கள்,
மதுபாட்டில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை
அனுப்பினர். பார்சல் எங்கிருந்து வருகிறது? யாருக்கு செல்கிறது?
முறையாக பில் போடப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.
