ADDED : அக் 19, 2026 06:29 AM
ஈரோடு:பட்டியலினத்தவரின்
உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்த ஒரு தரப்பை
சேர்ந்த ஒன்பது பேர், 15 நாட்களுக்குள் ஈரோடு முதன்மை மாவட்ட
நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை
தாலுகா மடத்துபாளையம் பெரும்பாளி கிராமத்தை சேர்ந்த பட்டியலின
முதியவர் சென்னி, 80; வயது மூப்பால் கடந்த, 5ம் தேதி இறந்தார். அரசு
புறம்போக்கு பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு
நடந்தபோது, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர்.
அப்போது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர், ரிதுபரண் என்பவரின் காலில்
விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக திங்களூர் போலீசார், ஏழு பிரிவுகளில் வழக்குப்
பதிவு
செய்தனர். இந்நிலையில் முன் ஜாமின் கோரி ரத்ன ரிதுபரண், ராஜசேகரன்,
ராஜேந்திரன், மகாலிங்கம், நிதிஷ்குமார், சுரேஷ், தமிழரசன், யுவராஜ்,
சாமியப்பன் என ஒன்பது பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். அனைவரும் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், 15
நாட்களுக்குள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
