/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி ராம் ஜி வேலை திட்ட தொழிலாளர்கள் மறியல்
/
ஜி ராம் ஜி வேலை திட்ட தொழிலாளர்கள் மறியல்
ADDED : மார் 15, 2026 07:18 AM
பு.புளியம்பட்டி:பவானிசாகர்
யூனியன் புங்கார் பஞ்., பகுதிகளில், 300க்கும் மேற்-பட்ட தொழிலாளர்கள்
ஜி ராம் ஜி வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு
வேலை வழங்கப்படும் போது, கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படும்.
ஆனால் வயதான தொழிலாளர்களுக்கு, இவை சரியாக பதிவாவ-தில்லை. இதனால்
இவர்களுக்கு வேலை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில்
ஆவேசமடைந்த தொழிலாளர்கள், பவானிசாகர்--பண்ணாரி சாலையில்
புங்கார் அரசு தொடக்கப்பள்ளி அருகே, நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்தினர். இணையதள சேவை குறைபாடு உள்ளதால் பிரச்னை
உள்ளது. ஓரிரு நாளில் சரி செய்யப்படும் என உறுதியளிக்கவே, மறியலை
கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

