ADDED : அக் 03, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம், சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா, தலைவர் சிந்தன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன் நடந்தது. காந்தியடிகள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
சங்க பொருளாளர் மெய்யப்பன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், நிர்வாகிகள் வையாபுரி, ராஜேந்திரன், ரமணன், ராமசாமி, திருமூர்த்தி, சிவக்குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.