/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை குவிப்பு
/
சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை குவிப்பு
ADDED : ஆக 22, 2025 01:07 AM
ஈரோடு, விநாயகர் சதுர்த்தி வரும், 27ம் தேதி கொண்டாடபடுகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈரோட்டில் பல இடங்களில், விநாயகர் சிலை விற்பனை தொடங்கியுள்ளது. கருங்கல்பாளையத்தில் காவிரி சாலையில், கிழங்கு மாவினாலான தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரி கூறியதாவது:
கிழங்கு மாவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை அரை அடி முதல், 10 அடி வரை உள்ளது. ரசாயனம் இல்லாத வண்ணம் பூசப்பட்டுள்ளது. சிலை, 60 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மூல பொருட்கள் விலை உயர்வால், கடந்தாண்டை விட, 15 சதவீதம் விலை அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் சதுர்த்திக்கு, 10 நாட்களுக்கு முன்பே சிலை விற்பனை தொடங்கி விடும். தற்போது ஐந்து நாட்களே உள்ள நிலையிலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. சனிக்கிழமைக்கு பிறகு விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.