ADDED : ஆக 03, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில் 'தேசம் காப்போம், ஜனநாயகத்தை காப்போம், இந்திய அரசியலமைப்பை காப்போம்' தலைப்பில் தெருமுனை பிரசாரம், தலைவர் மாதேஷ் தலைமையில் நசியனுாரில் நடந்தது. மாநகர் மாவட்ட மகிளா காங்., தலைவி ஞானதீபம் வரவேற்றார்.
எதிர்கட்சிகளின் நியாயமான விவாதங்களைக்கூட பார்லிமென்டில் பேச முடியவில்லை. கேள்விகளுக்கு பதில் கூறாமல், காங்., கட்சியினரை தேசவிரோதிகள் போல பேசுவதை கைவிட வேண்டும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பை குறைக்க வேண்டும். பக்கத்து நாடுகளுடன் நட்புறவு இல்லாமல், இந்தியாவை தனிமைப்படுத்துவதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் செய்தனர்.