ADDED : மே 26, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:கடம்பூர் போலீசார் அஞ்சனை பிரிவு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானிசாகர் அருகேயுள்ள புங்காரை சேர்ந்த ரமேஷ் குமார், 37, டூவீலரில் வந்தார். அவரிடம் சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா இருந்தது.
விசாரணையில் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து விற்பனை செய்வதற்காக வாங்கி செல்வதாக தெரிவித்தார். அவரை கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல்
செய்தனர்.
