/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் விடுமுறையால் மாநகரில் தேங்கிய குப்பை
/
தொடர் விடுமுறையால் மாநகரில் தேங்கிய குப்பை
ADDED : அக் 22, 2025 01:02 AM
ஈரோடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த, ௧௮ம் தேதி முதல் ௨௧ம் தேதி வரை தொடர் விடுமுறையாக அமைந்தது.
இதனால் ஈரோடு மாநகராட்சி வார்டுகளில் குப்பை சேகரிப்பு பணி, அள்ளும் பணி முடங்கியது. இதனால் சாலையோரங்களில் குப்பை குவிந்துள்ளது.
குறிப்பாக மணிக்கூண்டு, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரம், நல்லித்தோட்டம், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலைபோல் குப்பை கிடந்தது. பட்டாசு கழிவுகளும் சேர்ந்ததால், மாநகரில் பெரும்பாலான பகுதி குப்பை கூளமாக காட்சியளித்தது. இதனிடையே நேற்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் துாய்மை பணியாளர்கள் பணியாற்றினர். இவர்கள் மூலம் ஒருசில முக்கிய வீதிகளில் நடந்த துாய்மை பணியில், 30 டன் மக்கும் குப்பை, 35 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டது. இதில், 5 டன் பட்டாசு கழிவு அடங்கும் என்று, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.