/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேங்கி கிடக்கும் குப்பை பாரியூர் சாலையில் அவதி
/
தேங்கி கிடக்கும் குப்பை பாரியூர் சாலையில் அவதி
ADDED : அக் 10, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேங்கி கிடக்கும் குப்பை
பாரியூர் சாலையில் அவதி
கோபி, அக். 10-
கோபி அருகே, பாரியூர் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பையால், வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.
கோபி-அத்தாணி சாலையில், பா.வெள்ளாளபாளையத்தை கடந்து, பிரதான பாரியூர் சாலையின் ஓரத்தில், மலைபோல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அதை அப்பகுதி தெருநாய்கள் முகர்ந்து, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு, பிரதான சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம், அந்த குப்ைபயை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.