தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'ரீல்ஸ்' ரெடி பண்ணுங்க; ரொக்க பரிசு வெல்லுங்க!

'ரீல்ஸ்' ரெடி பண்ணுங்க; ரொக்க பரிசு வெல்லுங்க!

'ரீல்ஸ்' ரெடி பண்ணுங்க; ரொக்க பரிசு வெல்லுங்க!


ADDED : ஏப் 08, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான ரீல்ஸ் தயாரித்து, ரொக்க பரிசு வெல்ல, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடைவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்ட தேர்தல் லோகோவாக, டி-சர்ட், பேன்ட் அணிந்த, காளை முகம் கொண்ட 'தேர்தல் காளையன்' உருவாக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஊர்வலம், மாரத்தான், சைக்கிள் பேரணி, கோலம் வரைதல், துண்டு பிரசுரம் வினியோகிப்பது என, ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர் மத்தியில் பல்வேறுவகைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மத்தியிலும் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரீல்ஸ் தயாரித்து பதிவேற்றம் செய்வது; ரீல்ஸ் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான ரீல்ஸ் தயாரித்து வெளியிட சமூக வலைதளங்களில் பரவச் செய்யப்பட உள்ளது. இதற்காக, நேற்று முதல், தேர்தல் குறும்பட போட்டி துவக்கப்பட்டுள்ளது; வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

'தேர்தல் விழிப்புணர்வு ரீல்ஸ்' என்கிற தலைப்பில், ஓட்டளிப்பதன் முக்கியத்துவம்; நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்வது உள்ளிட்ட கருத்துக்கள் அடிப்படையில், 30 முதல் 60 விநாடிக்கு மிகாமல் ரீல்ஸ் உருவாக்கி, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் @DEO_Triuppur க்கு, டேக் செய்யவேண்டும். பதிவுகளுக்கு, VoteTiruppur, Sveep2026, MyvoteMyRight ஆகிய ஹாஸ்டாக் பயன்படுத்த வேண்டும்.

சிறந்த ரீல்ஸ் தயாரித்து பதிவேற்றம் செய்து, தினசரி வெற்றிபெறுவோருக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us