தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜி.எச்., ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜி.எச்., ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜி.எச்., ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜூன் 19, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ளிட்ட இடங்களில் ஒப்பந்த பணி செய்வோர் நேற்று வேலை நிறுத்தத்துடன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, கோபி, பவானி என, 5 அரசு மருத்துவமனை உட்பட, 12 இடங்களில் கடந்த ஏப்., 12 வரை, க்யூ.பி.எம்.எஸ்., என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், ஒப்பந்த பணியாளர்கள் பணி செய்தனர். ஏப்., 12க்கு பின், கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவனம், தொடர்கிறது. ஒப்பந்தத்தில் துாய்மை பணியாளர்கள், செக்யூரிட்டிகள் என, 12 இடங்களில், 794 பேர் பணி செய்யும் இடத்துக்கு, 600க்கும் குறைவானவர்களே பணி செய்கின்றனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில், 251 பேர் பணி செய்வதற்கு பதில், 175 பேர் பணி செய்கின்றனர். இவர்களில், 30 பேர் மருந்து வழங்குவோர், ஓ.பி., சீட்டு வழங்குவோர் என உள்ளனர். தவிர முதல் தேதியில் இந்நிறுவனத்துக்கு அரசு சம்பளத்தை விடுவிக்கும் நிலையில், 7 க்குள்

சம்பளத்தை பணியாளர்களுக்கு தர வேண்டும். மே மாதம் காலதாமதமாகவும், இம்மாத சம்பளத்தை, போராட்டத்தால் நேற்று முன்தினமும் வழங்கி உள்ளது. இவர்களுக்கு, 16,356 ரூபாய்க்கு பதில், 13,250 ரூபாய் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. மீதத்தொகை பிடித்தம் செய்துள்ளனர். முழு தொகை, முதல் வாரத்தில் ஊதியமாக வழங்க கோரி நேற்று வேலை நிறுத்தத்துடன், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ஈரோடு, கலெக்டர் அலுவலகம் வந்த, ஈரோடு மாவட்ட மருத்துவ துறை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில், அங்கேயே அமர்ந்திருந்து, கலெக்டர் கந்தசாமி மற்றும் இணை இயக்குனர் ஜெயந்தி, அலுவலகத்திலும் மனு வழங்கினர். கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்த நிறுவனம் மூலம் பேசி தீர்வு காண்பதாக கூறினார்.

பின், ஜி.எச்.,ல் இவர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். மாவட்ட தலைவர்

சின்னசாமி கூறியதாவது:

அனைவருக்கும், 7 ம் தேதிக்குள், முழு ஊதியத்தை, பிடித்தம் இன்றி தர வேண்டும். பி.எப்., - இ.எஸ்.ஐ., உள்ளிட்ட, 13 விபரத்துடன், சம்பள பட்டியல் தர வேண்டும்.

அந்தந்த மருத்துவமனைக்கு என பணியாளர்களை நியமிக்க வேண்டும். வேறு மருத்துவமனையில் பணி செய்வோரை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது. அந்தந்த மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரியின் தேவை அடிப்படையில் பணியாளர் எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். கடந்த மாதங்களில் பிடித்த தொகையை உடன் வழங்க வேண்டும், என வலியுறுத்தி போராட்டத்தை தொடர்கிறோம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us