ADDED : ஏப் 28, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, சென்னிமலை அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40; பட்டி அமைத்து, 10-கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று காலை அதே பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த தெருநாய் ஆடுகளை துரத்தி கடித்தது. இதில் ஒரு ஆடு இறந்தது. மற்றொரு ஆடு காயம் அடைந்தது. சென்னிமலை பகுதியில் ஆடுகளை தெருநாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்வதால், கால்நடை வளர்ப்போர் அச்சம் குறைவதாக தெரியவில்லை.
