ADDED : நவ 01, 2025 01:07 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி குருந்தன்காட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர், 10 வெள்ளாடு வளர்த்து வருக்கிறார். அதில் ஒரு ஆட்டை நேற்று காலை, நான்கு தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து துரத்தி கடித்ததில் பலியானது. அப்பகுதி மக்கள் விரட்டியதால் மற்ற ஆடுகள் காப்பாற்றப்பட்டன.
சென்னிமலையில் இதுவரை இரவில் மட்டுமே பட்டியில் புகுந்து ஆடுகளை வேட்டையாடிய தெருநாய்கள், தற்போது பகலிலேயே ஆட்டை கடித்துள்ளது, ஆடு வளர்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
