ADDED : மார் 30, 2026 05:33 AM
ஈரோடு:திறன்
மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், ஈரோடு ஜெம் அண்ட்
ஜுவல்லரி டெக்னாலஜி டிரெனிங் சென்டர் சார்பில், மேட்டூர் ரோடு, திருச்சி
கபே அருகில், ஈரோட்டில் உள்ள பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் ஏப்., 1 முதல் 10ம் தேதி வரை, 10 நாட்கள்
பயிற்சி நடக்கிறது. இதில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து
கொள்ளலாம். கல்வி தகுதி குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி
முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு
நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராக பணியில் சேரலாம். சுயமாக நகை
கடை. நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். பயிற்சியில் சேர விரும்புவர்கள் 3
ஸ்டாம்ப் சைஸ் போட்டோ. முகவரிச் சான்றிதழ், கல்வி சான்றிதழ் அவசியம்.
பயிற்சி கட்டணம். 8,500 ரூபாய். கூடுதல் விபரங்கள் பெற, 94437-28438 என்ற
எண்ணை அணுகலாம்.
