தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி


ADDED : ஜூன் 29, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், ஈரோட்டில் மேட்டூர் சாலையில், திருச்சி கபே அருகில் செயல்படும், ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜூலை, 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது.

தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் மூன்று ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழுடன் வரவேண்டும். பயிற்சி கட்டணம், 8,500 ரூபாய். கூடுதல் விபரங்கள் பெற, 94437 28438 என்ற எண்ணை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us