ADDED : ஜூலை 27, 2026 05:44 AM
ஈரோடு:திறன்
மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், ஈரோடு ஜெம் அண்ட்
ஜுவல்லரி டெக்னாலஜி டிரெனிங் சென்டர், 146 B,மேட்டூர் ரோடு, திருச்சி
கபே அருகில், ஈரோட்டில் உள்ள பயிற்சி நிலையத்தில் தங்க நகை
மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் ஆக., 3ம் தேதி
முதல் ஆக., 12ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது.
இப்பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும்
முறை. உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை,
ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண்
இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. பயிற்சி
முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை
அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராகவும் பணியில்
சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ,
முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ், பயிற்சி கட்டணம், 8,500- ரூபாய்
செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, 94437-28438 என்ற எண்ணை
அணுகலாம்.
