ADDED : நவ 23, 2026 06:41 AM
ஈரோடு:திறன்
மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், ஈரோடு மேட்டூர்
ரோடு, திருச்சி கபே அருகில், செயல்படும் ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி
டிரெனிங் சென்டரில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
அளிக்கப்படுகிறது. நவ.,30ம் தேதி முதல் டிச., 9ம் தேதி வரை, 10
நாட்கள் பயிற்சி நடக்கிறது.
தங்கத்தின் விலை கணக்கிடும் முறை,
கொள்முதல் செய்யும் முறை. உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், ஹால்
மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.
பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து
கொள்ளலாம். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார்
வங்கி, நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளாராகவும்
பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவர்கள் மூன்று ஸ்டாம்ப் சைஸ்
போட்டோ. முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ். மற்றும் பயிற்சி கட்டணம்
8,500 ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் விபரம் பெற, 94437 28438 என்ற
எண்ணை அணுகலாம்.
