ADDED : செப் 25, 2026 07:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சங்கர், 48. நேற்று காலை, 8:30 மணிக்கு வீட்டை பூட்டி சென்றார். 10:00 மணிக்கு திரும்பியபோது, வீட்டின் முன்புற பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 2 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளியை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து அங்கிருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த வாலிபர் குறித்து விசாரித்தனர். அவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மூர்த்தி மகன் மணிவேல், 23, என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தங்கம்,
வெள்ளி நகைகளை மீட்டனர்.
மணிவேல் மீது எருமபட்டி போலீஸ் ஸ்டேஷனில், நான்கு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
