ADDED : மார் 30, 2024 02:13 AM
ஈரோடு:ஏசு
கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை, கிறிஸ்தவர் புனித
வெள்ளியாக கடைபிடிக்கின்றனர். இதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள்,
சாம்பல் புதன் முதல், 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இதன்
நிறைவாக நேற்று புனித வெள்ளி, பெரிய வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி
ஈரோடு மாநகரில் உள்ள புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ., உள்ளிட்ட
பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இன்று இரவு,
10:30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, பிரார்த்தனை
தொடங்குகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா
(ஈஸ்டர்) சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடக்கிறது. நாளை அதிகாலை
சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
--* அந்தியூர் அருகே நகலுாரில்,
பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து, சிலுவையை சுமந்து
நகலுாரின் முக்கிய வீதிகள் வழியாக, பாடல்களை பாடியபடி,
கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும், 14 இடங்களில் சிலுவையை
வைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தேவாலயத்தை அடைந்த பின்
சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை செய்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட
கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
