/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி, பெருந்துறையில் கடும் பனிப்பொழிவு
/
கோபி, பெருந்துறையில் கடும் பனிப்பொழிவு
ADDED : பிப் 08, 2025 06:36 AM
கோபி: மார்கழி மாதம் துவங்கினாலே, அதையடுத்து வரும் தை மற்றும் மாசி மாதம் வரை, பனிப்பொழிவுக்கு பஞ்சம் இருக்காது. விவசா-யத்துக்கு பெயர்போன கோபியில், வயல்வெளி சார்ந்த பகுதி அதிகம் என்பதால், இந்த மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும்.
நேற்று அதிகாலை, 5:30 மணி முதல், வழக்கமான பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் காலை 8:00
மணிக்கு கோபி, பாரியூர், நஞ்சகவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், பொலவக்காளி பாளையம், சிறுவலுார், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடும்
பனிப்பொழிவு இருந்தது. இதனால் பிரதான சாலைகளில் வாகனங்களின் முகப்பு விளக்கை,
ஒளிர-விட்டபடி பயணித்தனர். அதன்பின் படிப்படியாக பனிப்பொழிவு குறைந்தது.இதேபோல் பெருந்துறையில் நேற்று காலை முதல் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு
நிலவியது. அதாவது காலை, ௮:௦௦ மணி வரை சாலையே தெரியாத அளவுக்கு இருந்தது. இதனால்
டூவீலர் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள், முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி, மெதுவாக
சென்றனர். காலை, 9:00 மணிக்குப் பிறகு, வெயில் வாட்டி வதைத்தது.