ADDED : பிப் 17, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்,: தாராபுரத்தை அடுத்த கோனாபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 54, தச்சுத் தொழிலாளி. தாராபுரம் பைபாஸ் சாலையில் நேற்று மதியம் 3:00 மணியளவில் நடந்து சென்றார்.
புதிய ஆற்றுப்-பாலம் அருகே சாலையை கடக்கும் போது, மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்-தவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

