sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

/

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி


ADDED : ஜூன் 14, 2025 07:11 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பாரத், 20; கடந்த, 2014 மார்ச் மாதம், பைக்கில் சத்தி சாலையில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் பலத்த காயம-டைந்தார். கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குடும்பத்தார் நஷ்டயீடு வழங்க கோரி, கோபி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்-தனர். கடந்த, 2019ல் செப்.,18ல் அப்போதைய நீதிபதி புஷ்ப-ராணி, 14.95 லட்சம் ரூபாய் நஷ்டயீடு வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், 2020 செப்.,7ல் கட்-டளை நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தனர். அதன் பிறகும் செலுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த ஏப்., 9ல் வழக்கு விசாரணைக்கு வந்த-போது, சார்பு நீதிமன்ற நீதிபதி ஜீவா பாண்டியன், விபத்துக்கு காரணமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைய-டுத்து கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர் செல்ல தயாராக இருந்த, அரசு மப்சல் பஸ்சை நீதிமன்ற பணியாளர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.






      Dinamalar
      Follow us