ADDED : நவ 29, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயத்தில் அரசு பஸ் ஜப்தி
காங்கேயம், நவ. 29-
கோவை, வீரகேரளத்தை சேர்ந்தவர் வனிதா, 31; டெய்லரான இவர், 2015ல் வேடப்பட்டி - கோவை ரோட்டில் மொபட்டில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். வனிதாவின் கணவர் கோபால்சாமி உரிய இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதில் இழப்பீடாக, 13.௬௦ லட்சம் ரூபாயை, 7.5 சதவீத வட்டி மற்றும் வழக்கு செலவு சேர்த்து, 21.59 லட்சம் ரூபாயை, வனிதா குடும்பத்தினருக்கு வழங்க காங்கேயம் சார்பு நீதிமன்றம், 2019ல் உத்தரவிட்டது. அதன் பிறகும் தராததால், 2023ல் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து காங்கேயம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

