ADDED : அக் 24, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட துணை தலைவர் கண்ணன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை, 1 முதல் முன் தேதியிட்டு, 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்.
தனியார் பல்கலை கழக சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் பல்கலை கழகமாக மாற்றுவது, தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வலியுறுத்தினர். கோரிக்கை குறித்து மாவட்ட செயலர் வெங்கிடு, சாமிகுணம், ரங்கசாமி உட்பட பலர் பேசினர்.

