ADDED : செப் 27, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, செப். 27-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் கோரிக்கை குறித்து பேசினார்.
ஒப்பந்த அடிப்படை, அவுட்சோர்சிங், தினக்கூலி அடிப்படை நியமன முறையை ரத்து செய்துவிட்டு, அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும். அரசின் கண்காணிப்பில் விரிவான கட்டமில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த, தினக்கூலி ஊழியர்களுக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.