ADDED : ஜூலை 04, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயலர் விஜயமனோகரன் தலைமையில், ஈரோடு அரசு ஐ.டி.ஐ., மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்
ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐ.டி.ஐ., படித்த மாணவர்களுக்கு பணி நியமனத்தில் வழங்கப்பட்ட விகிதாசாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தலையிட்டு, கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.