ADDED : செப் 18, 2025 01:39 AM
ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட துணை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் வெங்கிடு, மாநில செயலர் உஷாராணி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். 21 மாத கால ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுதல், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தி.மு.க., அறிவித்த தேர்தல் கால வாக்குறுதிகளை சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும், எனக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.