ADDED : அக் 14, 2026 07:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன்
ஆர்ப்பாட்டம் செய்தனர். வட்ட கிளை தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
டி.ஏ.பி.எஸ்.,
திட்டத்துக்கான விதிமுறைகளை உடன் வெளியிட்டு, பழைய பென்ஷன்
திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.
கடந்த டிச., 31 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ.பி.எஸ்.,
திட்டத்தின் பயன்களை நீட்டிக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களை
கொண்டே காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழக
இளைஞர்களுக்கு அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான நியமன
முறையை கைவிட்டு, கால முறை ஊதியத்தில் நியமனங்களை வழங்க
வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலர்
விஜயமனோகரன், நிர்வாகிகள் சுமதி, செந்தில்நாதன் உட்பட பலர்
பங்கேற்றனர்.
