தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தபால் ஓட்டு செலுத்திய அரசு ஊழியர்கள்

தபால் ஓட்டு செலுத்திய அரசு ஊழியர்கள்

தபால் ஓட்டு செலுத்திய அரசு ஊழியர்கள்


ADDED : ஏப் 18, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், தேர்தல் நாளில், 11,420 அரசு ஊழியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணி செய்ய உள்ளனர். இவர்களுக்கு தபால் ஓட்டு பதிவுக்காக படிவம்-12 வழங்கப்பட்டு விருப்பம் பெறப்பட்டது. இதில், 831 பேர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதது தெரியவந்தது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வழங்கி விருப்பம் தெரிவித்த, 9,553 பேர் தபால் ஓட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த, 15 ல், 8 தொகுதிகளிலும் தலா ஒரு இடத்தில் இந்த பணியாளர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. அன்று அவர்களுக்கு தபால் ஓட்டு செல்லும் வாய்ப்பு தரப்பட்டது. அதில், 8,246 அரசு அலுவலர்கள், பிற ஊழியர்கள் தபால் ஓட்டை செலுத்தினர். மீதமுள்ளவர்கள், 3 ம் கட்ட பயிற்சியின்போது தபால் ஓட்டை செலுத்த உள்ளனர்.

போலீசார் தபால் ஓட்டுமாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதியில் போலீஸ் அதிகாரிகள், போலீசார், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பிற துறையினருக்கு தபால் ஓட்டுப்பதிவுக்கு படிவம்-12 வழங்கி விருப்பம் பெறப்பட்டது.

விருப்பம் தெரிவித்தவர்கள், நேற்று முதல், 20 வரை அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டுப்பெட்டியில் தங்கள் ஓட்டை செலுத்தலாம். தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ''அந்தந்த தொகுதிக்கான ஓட்டுக்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, தேர்தல் நாளில் ஓட்டு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us