/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'எண்ணிக்கையை உயர்த்துங்கள்' அரசு செவிலியர் வலியுறுத்தல்
/
'எண்ணிக்கையை உயர்த்துங்கள்' அரசு செவிலியர் வலியுறுத்தல்
'எண்ணிக்கையை உயர்த்துங்கள்' அரசு செவிலியர் வலியுறுத்தல்
'எண்ணிக்கையை உயர்த்துங்கள்' அரசு செவிலியர் வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2024 01:39 AM
'எண்ணிக்கையை உயர்த்துங்கள்'
அரசு செவிலியர் வலியுறுத்தல்
ஈரோடு, நவ. 27-
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் சக்திவேல் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
மாநில செயலாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சகிலா வரவேற்றார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா, கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாநில பொருளாளர் காளியம்மாள், கீதா உட்பட பலர் பேசினர்.
மத்திய அரசில் செவிலியர்களாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து மருத்துவ கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். மருத்துவமனையின் தேவை அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால், பணிச்சுமை அதிகம் உள்ளதால் மன உளைச்சல் அடைவதற்கு தீர்வு காண வேண்டும்.
புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்கள், நோய் தொற்று காரணமாக எதிர்பாராமல் உயிரிழப்பு ஏற்பட்டால், அரசு அறிவித்திருந்த, 'கார்பஸ் பண்ட்' என்ற முறையில் பாதிக்கப்பட்ட செவிலியர் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே, செவிலியர் பட்டைய படிப்பு வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை, 700 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

