ADDED : மார் 16, 2024 01:21 AM
அ நிறம் | அளவு
டி.என்.பாளையம்:கள்ளிப்பட்டி
அருகேயுள்ள கணக்கம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்,
புதிதாக பள்ளியில் சேர இருக்கும் குழந்தைகள் மற்றும் வேறு பள்ளியில்
படிக்கும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, இசை மேளம்
முழங்க, பதாகை ஏந்தி, கோஷமிட்டபடி கணக்கம்பாளைத்தில் அனைத்து
வீதிகளிலும் நேற்று விழிப்புணர்வு பேரணி
சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
