/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சித்தோடு அருகே டாக்டர் வீட்டுக்கு வந்த கவர்னர்
/
சித்தோடு அருகே டாக்டர் வீட்டுக்கு வந்த கவர்னர்
ADDED : பிப் 15, 2026 05:15 AM
பவானி: சித்தோடு அருகே காங்காபுரம், வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் டாக்டர் ராஜா, 67; இவர் கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வர-லாற்று நிபுணராக உள்ளார். இவரது மனைவி டாக்டர் சங்கமேஸ்-வரி. ஈரோடு தனியார் மருத்துவ கல்லுாரி பேராசிரியை. ராஜாவின் ஆராய்ச்சி பற்றி கேள்விப்பட்ட தமிழக கவர்னர் ரவி, கோவையில் இருந்து நேற்று மாலை, 4:35 மணியளவில் டாக்டர் ராஜா வீட்டுக்கு வந்தார்.
ராஜா வீட்டில், 5,000க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், கல்-வெட்டு ஆராய்ச்சி, வரலாறு, தொல்லியல் புத்தகங்கள் அடங்கிய நுாலகம் உள்ளது. இதை பார்வையிட்டு ராஜாவிடம் கேட்ட-றிந்தார். அவரிடம் உரையாடிய நிலையில், 5:20 மணிக்கு கிளம்பி சென்று விட்டார்.

